என்னை என்ன செய்தாய்
விழியில் வழுக்கி
என் இதயத்தில்
விழுந்து விட்டாயடா ?....
இரவுகள்
மயான அமைதியாய்...
உறங்காமல்,
பக்கம் பக்கமாய்.....
புரண்டு....புரண்டு....
முதுகுகள்
புண்னாகிப்போனதடா...
நான்
என்னை
என்ன சொல்லி..
ஆசுவாசப்படுத்த................
இதுகாலம்-நான்
சிலையாகத்தான் இருந்தேன்.-நீ
விழுந்தாய்-நான்
தேவதையானேன்.
என்ன செய்தாயடா என்னை ?