வாய்க்கால் வரப்பினிலே
வாய்க்கால் வரப்பினிலே வாழை மரம் தென்னை மரம்
-----வயலில் விரிந்து கிடக்குது பச்சை நிறம்
ஆத்தோரம் நீ நடக்கையிலே ஆலோலம் பாடுது ஆலமரம்
-----ஒய்யாரமா நடந்து வரும் ஒனக்கோ கருப்பு நிறம்
தென்னம் பூவைப் போல் உன் சிரிப்பு தென் பாண்டி முத்து நிறம்
----பாத்துப் பாத்து பரிதவிக்குது இந்த கருத்த மாமனின் வெள்ளை மனம் !
------கவின் சாரலன்