போடி கண்டுக்கல

சுட்டக்கறி வச்ச போதும்
திரும்பிக்கினேன்டி-நான்
லெஸ்ஸி மோர வேளாவேள
ஊத்திக்கினேன்டி

பானு பீடா கடையாண்ட
சும்மா நின்னேன்டி-ஒன்
ஓரப் பார்வை ஒன் ட்வென்டி
கிக்குதானடி..

சட்டி உருளும் நெஞ்சுக்குள்ள
சிட்டு பறக்குது-ஒரு
கூவத்துல நெலா மெதக்க
கவுத பொறக்குது..

க்ளிங்கு சவுன்டில் பதறி உசுரு
செதறிப் போவுது
ட்ரில்லு மெசினா ஒன் நெனப்பு
நெஞ்சக் குடையுது..

சிக்ஸர் ரசிக்க மனசில்ல
டவுசர் கழண்டும் அறிவில்ல
டோசு விடும் ஃப்ரண்ட நானும்
போடி கண்டுக்கல..
--கனா காண்பவன்

எழுதியவர் : கனா காண்பவன் (22-Jun-15, 9:01 pm)
பார்வை : 106

மேலே