உறவு ஒன்று உயில் எழுதுகிறது - 8

ஆயிரம் வழிகளில்
என் அன்பை சொல்லியிருப்பேன்
உன்னை விட்டுக் கொடுக்க முடியாமல்
நான் கொட்டி இறைத்த
வார்த்தைகளை கொண்டா...
என்னை வெட்டி விட நினைக்கிறாய்...?
நீ போவதானால் போ..
நான் மாறப் போவதில்லை
மண்ணில் என்னை
புதைத்து விடும் நாள் வரையில்..
நீ என்னை பார்க்காத போதும் கூட
உன் நினைவுகள் ]
உன்னை விட அதிகமாய்
என்னை பார்த்துக் கொள்கின்றன..
உன்னை பிரிந்த பின்னும்
உயிர் வாழ்வேன்.
உன் நினைவுகளையும் பிரியும் வரை...
கண்ணில் மறைந்த பின்னும்
கவிதை எழுதுவேன்
கனவுகளும் உன்னை தொலைக்கும் வரை...
என்னை தண்டித்தது தவறு என்று
நீ தவிக்கும்போது
நீ தொட முடியாத தூரத்தில் நான்....