தனிமை இல்லை
நிலவை என் கண்களில்
கொண்டேன்...
யாரும் பாா்க்காத தாளில்
கவிதை பதிக்க நான் வந்தேன்...
எனது இரு விரல்களின் இடையில்
புகையால் வரும் சங்கை
வைத்துக் கொண்டு ...
சமாதியின் அமைதியான
இரவின் தனிமையில்...
தெரு நாய்கள்
சத்தமும்...
கூா்காவின் விசில்
சத்தமும்...
அடுத்த வீட்டு தலைவனின் குறட்டை
சத்தமும்...
மூன்றாவது வீட்டில் சிறு ஒளியில்
அழும் குழந்தையின் தாய் பால்
சத்தமும்...
வீட்டின் மாடியில் பெற்றோா் தொியாமல்
சிறு புகையில் வரும்
தீப்பொறியில் உஷ் என்று
மூச்சி விடும் இளைஞனின்
சத்தமும்...
தூங்காத படுக்கையில்
அழகியின் காதல் தொலைபேசி
விளையாடும் கிசு கிசு
சத்தமும்...
என் கவிதையை இரண்டு
பககம் தாண்ட உதவியது...