குர்ஆனின் திறவுகோல்

திருக்குர்ஆனின் முதல் அத்தியாயமும் திறவுகோல் என்ற பொருளைக் கொண்டதுமான சூறா அல் பாத்திஹா வின் மொழிபெயர்ப்பை கவிதை யாக்கும் முயற்சி....

பிஸ்மில்லாஹி...



எண்ணிலா உலகைப் படைத்து

  ஏகமாய் ஆளு கின்ற

தன்னிகர் இல்லா அல்லாஹ்

  தமக்குதான் புகழ்கள் எல்லாம்

அன்பினில் நிகரே இல்லான்

 அருளினில் இணையே இல்லான்

பின்வரும் நியாயத் தீர்ப்பு

  பெருந்தினம் அதனின் மன்னன்

உன்னையே தொழுது வணங்கி

  உதவியும் கோரு  கின்றோம்

நன்னயம் காட்டும் வழியில்

  நாளும்நீ நடத்தி எம்மை

உன்னருள் பெற்ற நல்லார்

  உயர்வினை ஈவ தல்லால்

முன்னரும் பின்னும் உன்றன்

  முனிவினிற் காளா னோரின்

இன்னமும் வழிகெட் டோர்கள்

   இயல்பினில் ஆக்கி டாதே!


                  ஆமின்

ஆக்கம்: அ.மு.நௌபள்,கிள்ளான்

21/06/2015


   

எழுதியவர் : அபி மலேசியா (22-Jun-15, 10:47 pm)
பார்வை : 524

மேலே