அது ஒரு ராசியான

அப்பாவுக்கு
பலநாளாய் வேலை
இல்லை
ஆதலால்
அம்மாவுக்கு
சமயலறை வேலை
இல்லை

அப்பாவுக்கும்
அம்மாவுக்கும்
தம்பிக்கும்
தங்கைகளுக்கும்
எனக்கும்
பசி மட்டும்
நிறைவாய் இருந்தது

யாரிடமாவது பணம்
புரட்ட சென்றார்
அப்பா
எந்த வேலையும்
சுலுவாய் முடியும்
அந்த இராசியான
சைக்கிளில்

அரிசி
பருப்பு
காய்கறிகளுடன்
வெகுநேரம் கழித்து
நடந்து வந்தார்
அப்பா

அந்த இராசியான
சைக்கிளை
மகாலட்சுமி
அடகு கடையில்
விட்டுவிட்டு.

எழுதியவர் : தர்மராஜ் (23-Jun-15, 2:43 pm)
பார்வை : 202

மேலே