ஆளுமை
ஆளுமை
எந்த வம்புக்கும் போகாத நான்
சொந்த அலுவலில் மூழ்கி இருந்தேன்
”இந்தாங்க” எனக் கூவி அழைத்து
சந்தைக்குப் போகலாம் வாருங்கள் என்றாள்.
தாலி அறுத்தான் சந்தை ஏனோ
காலியாய் நாதியின்றி கிடந்தது அன்று.
கூடாத நாளில் கூப்பீட்டு வந்தாயா?
இன்று என்ன கிழமை என்றேன்.
வாடாமல் சிதறிக் கிடந்த காய்களை
மாடாக நின்று கூட்டிச் சேர்த்தாள்.
ஆடாவது தின்னும் அதற்காக வந்தேன்
கூடையில் எடுங்கள் கூடவே வாருங்கள்.
என்னைப் பொறுக்கச் செய்வது சரியா
எண்ணிப்பார் என் பதவியை என்றேன்.
சின்னத் தனமாய் பெருமை வேண்டாம்
உம்மையே ஆள்வது நான்தான் என்றாள்.