வார நாட்கள்

வாரத்தின் ..
எல்லா நாட்களும்
வழக்கம் போலத்தான்
வந்து செல்கின்றன..
..
அதே..
ராகு காலம்..
அதே ..
எமகண்டம்..
என்று..!

நான்தான் ..
ஒவ்வொருநாளும்
வெவ்வேறு மாதிரி
மாறி விடுகிறேன்..
..
ஆசைகளால்..
பார்வைகளால்..
தேவைகளால் !

எழுதியவர் : கருணா (24-Jun-15, 10:28 am)
Tanglish : vaara nadkal
பார்வை : 356

மேலே