மனவுறுதி
அடிபட்டு
அரசு
மருத்துவமனையில்
அவசர சிகிச்சைப் பிரிவில்
உயிரை பற்றி கவலைப்படாமல்
அவர் உறுதியாக சொல்லி விட்டார்..
எந்த சாதிக்கரனுடைய..
எந்த மதத்தானுடைய..
இரத்தம்
என்பது தெரியாத..
இரத்த வங்கியின் மூலம்
பெறுகின்ற..
இரத்தம் எனக்கு
வேண்டவே.. வேண்டாம் என்று !
மனவுறுதி ..என்பது
கொள்கைப்பிடிப்பு ..என்பது ..
இதுதானோ?