இனிய நண்பா.
அன்றலர்ந்த மலர் என்னைப் பார்த்து
"உன்னுள் எத்தனை சுகந்தம்" என்றது.
அப்போது உதித்த ஆதவன் என்னைப் பார்த்து
"உன்னுள் எத்தனை ஒளி " என்றது.
அருகில் வந்த தென்றல் என்னைப் பார்த்து
"உன்னுள் எத்தனை உன்மத்தம் " என்றது.
உயரத்தில் இருந்து கொட்டிய அருவி என்னிடம்
"உன் உள்ளத்தின் ஊற்றே உவகை " என்றது.
வானில் நின்ற காற்று என்னைப் பார்த்து
"உன்னுள் எத்தனை உலகம்" என்றது.
செயற்கை இல்லா இயல்பினால் என்னை
இயற்கையும், "இனிய நண்பா" என்றது.
பாலு குருசுவாமி