அலைபேசி
எப்போதும் அலைபேசி என் கைகளில் தவழ்கிறது...
சில நேரம் உனக்கு குறுஞ்செய்தி அனுப்புவதால்...
சில நேரம் உன் குறுஞ்செய்திக்காக காத்திருப்பதால்...
சில நேரம் உன் குறுஞ்செய்தியை வாசிப்பதால்...
ஆக மொத்தம் உன்னையும் உன் நினைவுகளையும் தாங்கிக் கொண்டு என் கைகளில் தவழ்கிறது அலைபேசி!!!