ரீல் விடுவதை

அன்றும் இன்றும் என்றும் எனக்கு பிடித்த ஒரே கவிதை அவள் பெயர்

நீல வானத்தை விட
நீளமான அவள் நெற்றி

சூரியனை விட கூர்மையான அவள் கண்கள்

மயிலிறகை விட மென்மையான அவள் இமை

தங்க கிண்ணத்தில் வைரம் பதித்தார் போல் அவள் மூக்கு

ரோஜா இதழை விட சிவப்பான அவள் இதழ்

குயிலிசை விட மென்மையான அவள் தமிழிசை

மொத்தத்தில்
எனக்காக பிரம்மன் அனுப்பிய அழகிய லைலா அவள்

அவள் குடியிருக்கிறாள் என்பதால் இதயம் துடிப்பதையே தடுத்துவிட்டேன்

ஆன்பே
பிடிக்கவில்லை
என்றால்
சொல்லிவிடு

நிறுத்திவிடுகிறேன்

இப்படி ஓவரா ரீல் விடுவதை...😜

எழுதியவர் : நவின் (24-Jun-15, 6:46 pm)
பார்வை : 102

மேலே