எங்கே அவள்
"எப்படி லூசு உங்களால
இப்படியெல்லாம் யோசிக்க முடிகிறது"
என்ன இது?
லூசு மாதிரி ஏதோ எழுதியிருக்கிறான் என்று
நீங்கள் சொல்வது கேட்கிறது
ஆமாம்..
நீங்கள் சொல்வது கேட்கிறது
அது வேறொன்றுமில்லை...
கவிதையென்று சொல்லி ஏதேனும் உளறினால்
அவள் இடும் கருத்து அது..
இப்போதும் எழுதுகிறேன் கவிதையென்று ஏதேதோ
ஆனால்
அவள் எங்கே சென்றாள்?
கருத்திட முடியாமல்
மொழிகள் முழுதும் தொலைத்தாளா?
இல்லை
என் முகவரிதான் தொலைத்தாளா?
எழுத்துக்கள் எல்லாம் தொலைத்தாளா?
இல்லை
எனையேதான் தொலைத்தாளா?
என்னவளே...
எங்கே இருக்கிறாய் நீ?
இதோ..
நான்
இங்கேதான் தொலைந்து கிடக்கின்றேன்
"கவிதைக் காட்டில் கண்ணீர் மழையோடு"