எதற்கு மதங்கள்
கடவுளைப்பிரித்து பகடைகளாய் உருட்டிவிளையாடும் பரமபத
விளையாட்டே- மதங்கள்
இங்கு ஒவ்வொரு
கடவுளும் பகடைகள்.!
ஒவ்வொரு மனிதனும்
ஓர் பகடைக்காய்.!
ஒவ்வொரு மதமும்
ஓர் பாம்பு.!
நல்ல பகுத்தறிவே
இங்கு ஏணிகள்.!
ஒவ்வொரு கட்டமும்
ஓர் மதகொள்கை.!
கட்டத்தில் மூழ்கியோர்
பாம்புகளுக்கு இரையாவர்.!
ஏணியில் ஏறி பாம்புகளை
கடந்தோரே வெற்றிப்பெறுவார்...