மலர்

மலரெனச் சொன்னீர் !

மங்கையரை !!

பசுமையாய் ரசித்து ,
தன்மையாய் பறித்து ,
மென்மையாய் கோர்த்து,
மாலையாய் அணிந்து
வேலை தீர்த்தபின்

மணம் போன சடமாய்
விட்டெறிந்தீர் வீதியில் .

உவமை உண்மையானது .

எழுதியவர் : கேசவன் புருசோத்தமன் (24-Jun-15, 9:26 pm)
பார்வை : 970

மேலே