உதிர்ந்து கொண்டிருக்கும் காதல்

உயிரே ....
என்னிலிருந்து - நீ
விலகுவது புரிகிறது .....
அழுவதற்கு அசிங்கப்பட்டு ....
இருட்டறைக்குள் அழுகிறேன் ....
சாப்பிடுவதுக்கு விருப்பம் இன்றி ...
சாப்பிட்டவன் போல் நடிக்கிறேன் ....!!!

உன்னோடு பேசிய நிமிடங்கள் ....
உன்னோடு நடந்த வீதிகள் ....
உனக்காய் உன்னை வரைந்த ஓவியம் ....
எனக்கென எதையும் செய்யாமல் ...
உனக்காக வாழ்ந்த வாழ்க்கை .....
அத்தனையும் வீணாக போனது ....
கவலையில்லை -காதலும் ....
இல்லாமல் போய்விட்டதே ....!!!

உனக்காக ஒரு கவிதை எழுத ...
எழுதுகருவியை எடுக்கிறேன் ...
மறுக்கிறது கருவி எழுத மாட்டேன் ....
ஈரமுள்ள இதயத்துக்கே கவிதை ....!
உனக்காக இறுதி ரோஜாவை ....
பறித்தேன் - உதிர்ந்து விழுந்தது ...
உன்னைப்போல் இரக்கமற்று ....!!!

எழுதியவர் : கே இனியவன் (25-Jun-15, 8:07 am)
பார்வை : 236

மேலே