தொடரும் என் வலிகள் - சகி

காதலே ....

பிரிந்து சென்ற
என் தொலைதூரக்காதலே..........

காத்திரு என்றாய் !

உன் வார்த்தைகளை
உயிராக எண்ணி
மறுப்பு ஏதுமின்றி
கன்னியிவள் கண்ணீருடனே
வருடம் சில கடந்தேன் ..............

பரிசாக நீ கொடுத்தது
வலிகளும் மறக்கமுடியா
வேதனைகளையும் தான்..............

அன்றே!!!

மரணித்திருந்தால் என் உள்ளம்
சுடும் வார்த்தைகளையும்
வலிகளையும் இன்று என் உள்ளம்
உணராமல் இறந்திருக்கும் .............

என் கண்ணீரில் தினம்
கரைக்கிறேன் என் வலிகளை........

உணரும் உறவில்லை !

மரணம் என்னை
அழைக்கும்வரை வலிகளுடனே
என் இவ்வாழ்க்கைப்பயணம் ..............

தொடரும் !

எழுதியவர் : சகி (25-Jun-15, 11:26 am)
பார்வை : 556

மேலே