ஐந்தறிவும்__ஆறறிவும்

தனக்கு உணவு
தாமதமாய் கிட்டினாலும்
தனியே உண்ணாது
தன்னினத்தை கரைந்து
அழைத்துக்கொண்டிருந்தது
ஐந்தறிவுக் காகம்...
உயிரோடு
பலரிங்கு பசித்திருக்க...
இதுவரைப் பிறக்காத
தன் வம்சத்திற்கு
தனம் சேர்க்கிறான்
ஆறறிவு மனிதன்...?
---------------------------------------------------------------------
குமரேசன் கிருஷ்ணன்