எது உண்மையான வாழ்கை - உதயா

ஆண்டுகள் பல
மாறியப் பின்பும்
இன்றும் மாறாதவே இருந்தது
என் கிராமத்தின் வாசனைகளும்
அவ்வப்போது தொட்டுவிடவே வரும்
தென்றலின் வருகைகளும்

வழியெங்கும் பசுமை காட்சிகள்
என் மனதில் ஏதோ ஒரு இனம்புரியா
உணர்ச்சியினை வழிய செய்தது
தேன்குடுவையில் சொட்டும் தேன்துளிகள்
நாவில் உமிழ்நீரை வழிய செய்வதை போல

தாத்தாவின் வீட்டினை நோக்கிய
என் பயணத்தை தடுத்து நிறுத்தவே
ஊரெங்கும் தொடர்ந்து கொண்டே இருந்தது
அன்புயெனும் வில்லில் நலன்விசாரிப்பு எனும்
அம்பை பூட்டி தொடுக்கும் பாசப் போர்கள்

பல வருடத்திற்கு முன் நான் கையசைத்து
விடைகொடுத்து சென்ற பக்கத்து வீடு நாய்க்குட்டி
இன்று கிழவனாக வளர்ந்து இருந்தும்
இந்த குமரனை கண்டவுடன் தன் வாலினை
ஆட்டிக்கொண்டே என் காலினை சுற்றி வந்து
நாய்களின் பாஷையில் அதன் நலன் விசாரிப்பை
தொடன்கியவாறே என் கையில் முத்தமிட்டது

பாட்டியின் அசத்தலான விருந்துடன்
நல்ல இருக்கியா குட்டுயென
அக்கம் பக்கத்தினர் அன்போடு
பழங்களையும் பலகாரங்களையும்
எனக்கு படையலிட தொடங்கினர்

என் கிராமத்தின் மக்கள்
குடிசையில் வாழ்ந்தாலும்
மனதளவில் அவர்கள் மன்னர்களே
அன்பிலும் பாசத்திலும் கருணையிலும்
வள்ளல்களையும் கடவுள்களையும் மிஞ்சியவர்களே

என்னதான் நகரத்தில்
அடுக்குமாடி கட்டிடத்தில் கார் கப்பல்யென
வசதியுடன் வாழ்ந்தாலும் எல்லாம்
நான்கு சுவருக்குள்ளே முடிந்துவிடுகிறது

எழுதியவர் : udayakumar (25-Jun-15, 12:27 pm)
பார்வை : 165

மேலே