மியன்மார்

போதி மரத்தடி
புனிதன்
நிர்வாணமாகிறான்.
.

அன்புவழி
போதித்தவனை
ஆயுதம் கொண்டு
ஆராதிக்கின்றனர்.


பிணி தீர்க்கும்
காவிகள்
பிணம் தின்று
திருப்தி அடைகின்றன.


ஈழத்தில்-
மனிதம்
தின்ற பவுத்த தீ
விசாகக் காற்றில்
அள்ளுப்பட்டு
மனித கறி படைக்கிறது
மியான்மாரில்.


மதம்
மனிதத்தை
வளர்க்கவில்லை
மதம் வளர்க்க
மனிதனை வதைக்கிறது

@

(மியன்மார் கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்காக எழுதியது)

எழுதியவர் : Selvanesan (25-Jun-15, 4:45 pm)
பார்வை : 133

மேலே