சமர்ப்பணம்

ஏதும் தோன்றவில்லையா
இல்லையே என்றால்
அது பொய் தானே...
அப்படியானால்
என்ன தோன்றுகிறது
சொல்லா விட்டால்
கோபம் கொள்வேன்,
சரி தான் போ என்று சொல்கிறாயா ...
நான் போக மாட்டேன் என்று தெரிந்து தானே
சொல்கிறாய் ...
புரிந்து விட்டது நீ தீட்டும் எண்ணம் என்ன என்று
ஆனது ஆகட்டும் ,
போனது போகட்டும்
நீ என் கண்ணன் அல்லவா...
என் காதல் யாவும் உனக்கே சமர்ப்பணம்!!!

- உன்னவள்

எழுதியவர் : சாமு திருவள்ளுவன் (25-Jun-15, 8:57 pm)
Tanglish : samarppanam
பார்வை : 80

மேலே