மகனே என் ராஜ்ஜியம்......

தத்தி தத்தி தாவி வந்த
தங்கப்பிள்ளை நீயடா....

என் மடியில் தவழ்ந்து தோளில் சாய்ந்த
முத்துப்பிள்ளை நீயடா....

உன் வட்ட முகத்தின் பட்டுக்கன்னம்
என்னில் வந்து ஒட்டடா....

என் எண்ணமெல்லாம் எனை மறந்து
குட்டிக்கரணம் போடடா....

பாசம் வந்து குவிந்து நிற்கும் என்
நெஞ்சை தொட்டு பாரடா....

வானில் நிலவும் எட்டிப்பார்க்கும்
உன் குறும்பு காணத்தானடா.....

அந்த வட்ட நிலவை எட்டிப்பிடிக்க
நீயும் கனவு காணடா....

ராஜா நீயும் ஓடி வந்து
என் ராஜியத்தை ஆளடா....

எழுதியவர் : தோழி (13-May-11, 1:15 pm)
சேர்த்தது : faheema
பார்வை : 374

மேலே