காளையின் மனமோடல்

காளையின் மனமோடல்!
கொத்தான மலர் சூடி,-அவள்
கொவ்வை இதழ் பா பாடி,
அத்தரென நாற்றமுள்ள பெண்ணை – அவள்
அணைத்திடவே அனுப்பிவிட்டான் கண்ணை !
முத்தாக முருவளிக்க,
முகத்தோடு மதி யொளிக்க,
பித்தாக மாற்றிவிட்ட மஞ்ஞை – அவள்
பின்னாலே ஓடவிட்டான் நெஞ்சை !
கிளை யேறா கனி பறிக்க,
கிண்ணமிலா மது குடிக்க,
வலைவாக வளைந்திட்டான் கையே – அங்கு
வனிதையிலை வாதிட்டான் மெய்யே !
இட்ட அடி எழில் கொண்டு,
எடுத்த அடி வழி கண்கொண்டு,
விட்டகன்ற மேனியளைத் தேட – நெஞ்சால்
விரைந்திட்டான் மானிழையைக் கூட !