அவளை விடவும்
அடிக்கடி பார்க்காமல் போனாலும்
அவ்வ பொழுதேனும்
தரிசனம் தரும்
அவளை விட
ஒரு அழகியை
தேடி கண்டு பிடித்து
அவளிடம் காட்ட வேண்டும் என்று
முயற்சி செய்யும் எல்லா நாளும்
கண்ணாடியை மட்டுமே
நீட்டுகிறேன் அவளிடம்
அவளை விட ஒரு அழகியை
எங்கே போய் தேட
செல்ல பார்வைகள்
சின்ன கோபங்கள்
அழகிய புன்னகை
என
அனு அனுவாய்
மனம் முழுக்க நிறைந்திருக்கும்
அவளை விட
வேறு ஒருத்தி
தேடினாலும் கிடைக்காது
என்பதை தெரிந்தே என்னை வாட்டுகிறாள்
அழகென்ற கர்வத்தோடு