முத்தம்

இன்று எப்படியாவது
உன்னிடம் வாங்கிவிட வேண்டுமென
எண்ணக் குளத்தில் கல்லெறிந்து,
கலைத்தாள் சைவமாய் மாறிட்டே...

அவளருகில் முகம் கொண்டு
பேசிடும் வேளையிலும்,
இதழருகில் கன்னம்
இட்டுச் செல்லும் நொடியிலும்,
முகவாய் தாடை வருடும் பொழுதும்,
உதடுகள் சுளிக்கும் நேரத்திலும்,
கண்டுகொள்ளாமல் இருக்கிறாள்
கல்லூலி மண்கனை எனக்கானவள்...

இனியும் முத்தத்திற்காய் தவமிருத்தல்
உத்தேசப்படா என்று
வேறு திசை திரும்ப எத்தனிக்கையில்,
கணத்தில் இதழ் பதித்தால்
திடீர் இன்பம் தந்து
திடுக்கிட்டு திக்குமுக்காட செய்தாள்...

சுகமான மகிழ்ச்சி என்றால்
எதிர்பார்த்த ஒன்று எதிர்பாரா நேரம்
கிடைப்பது தானேட என்று சொல்லி
மீண்டும் இதழ் பதித்து
எச்சில் முத்திரை பதிக்க ஆரம்பித்தாள்...

எழுதியவர் : Thamizh (13-May-11, 7:03 pm)
சேர்த்தது : Thamizh
Tanglish : mutham
பார்வை : 497

மேலே