கண்ணீர் தேசம்

காற்றையும் கலப்படம்
செய்து லாபம் தேடும்
கயவர்கள்
தேசம் இது ..............

கல்லறைப் பிணங்களில்
புதையல்
தேடும் கள்வர்கள்
சுவர்க்கம் இது.............

பூவை புதருக்குள் புண்ணாக்கி
கசக்கி எரியும் புண்ணிய
புருஷர்களின்
புகலிடம் இது............

சகமனிதனின் மாமிசத்தை
ரத்தமும் சதையுமாய்
ருசிக்கும் காடேரிகளின்
ஆட்சி இங்கு ...........

தண்ணீர் கேட்டால்
கண்ணீர்
தரும் வள்ளல்களின்
வாசஸ்தலம் இது ............

நண்பன் நாளை
எதிரியாய் மாறும்
நன்றி மறந்த
சமூகம் இது.............

பூக்களில் கூட
ரத்தவாடை
வீசும் புதினம் நிறைந்த
பூமி இது.............

பிணக்குன்றுகள்
சதைக் குவியல்கள்
குருதியாறுகள்
கண்ணீரருவிகள்

ஆ...... அழுகுரல்கள்
இசையால்
அலண்டு துடிக்கிறது
அண்டம்..................

புரட்சிகள் எங்கே.......?
சட்டங்கள் எங்கே.......?
தலைவர்கள் எங்கே.......?

வெள்ளைப் புறாக்களை
கூண்டில் அடைத்துவிட்டு
கழுகு கூட்டங்களுடன்
விருந்தென்றால்................

நிச்சயம் இது ஒரு
கண்ணீர் தேசம் தான்!!!!

-ருஷானா-

எழுதியவர் : ருஷானா (27-Jun-15, 4:51 pm)
Tanglish : kanneer dhesam
பார்வை : 146

மேலே