காலம் கடந்து

காலம் கடந்து

கம்பனையும்
பாரதியையும்
கண்ணதாசனையும் போல
என் கவிதைகள்
காலம் கடந்து நிற்குமா
என்று தெரியவில்லை

ஆனால் உன்மீதான
என் காதல் காலம் கடந்து நிற்கும்
காற்றில் கலந்த
உன்னாலான என் நினைவுகள்
நிரந்தரமாக இருக்கும்

நிசப்தங்களை உற்று கவனி
உன் இதயத்தின் வெற்றிடம் நிரப்பும்
என் நினைவுகள்
அங்கு இருக்கக்கூடும்

உன்னால்தான்
உடல்களின் இடைவெளி
உறவுகளின் இடைவெளி அல்ல
எனபதை உணர்ந்தேன்

தொலைதூரம் சென்றாலும்
தொலைந்து விடாது
அன்பென்று அறிந்தேன்

கண்ணீர் துளிகளின்
கனம் அறிந்தேன்

உன் விம்மல்கள்
என் அன்பு ஆலமரத்தின்
வேர்கள்

உன் உயிரின் வேர்கள்
என் இதயத்தின் ஒட்டுண்ணிகள்
உன் மௌனம்
என்றும் என் மனதிற்கு
மல்லிகை மணம்

இன்னொருமுறை சொல்கிறேன்
பயணங்கள் பாதைகள்
மாறலாம்

ஆனால் காலம் கடந்து நிற்கும்
உன்மீதான என் காதல்

எழுதியவர் : இ ஆ சதீஸ்குமார் (28-Jun-15, 10:35 pm)
பார்வை : 75

மேலே