என்னவள்!...

எழில் கொஞ்சுமவல் புன்னகையில் உள்ளமது நோகும்,
அவள் கண்ணசைவில் விண்ணுலகும் எள்ளளவாய் போகும்,
அவள் கன்னமது எண்ணுகையில் முக்கனியின் சாரும்,
அந்த கின்னமதில் தெள்ளமுதும் தேவையில்லா போகும்!

அவள் கூந்தலெனும் காடுதனில் வேடனவன் இல்லை,
கண்ட விழி இரண்டை மாற்றுதற்கு உள்ளமது தொல்லை,
அவள் காற்குழலே காற்றினிலே அருவியென பாயும்,
மனம் காதலிலே காயம்பட்ட குருவியென சாயும்!

அந்த விண்ணுலக இந்திரரும் சந்திரரும் கூட,
அவள் பின்னழகு பின்னுகையில் பித்தனென போவர்,
ஒரு சிந்தனையில் சிற்றிடையை சன்னமென கண்டேன்,
சித்தமது பெற்றவனாய் எண்ணமதை கொண்டேன்!

எழுதியவர் : யாசுதாசன் (14-May-11, 10:25 am)
சேர்த்தது : pOp SamEeR
பார்வை : 384

மேலே