நீ புன்னகைக்க கண்ணைவிட்டு பாய்ந்து வந்ததே...

நீ புன்னகைக்க கண்ணைவிட்டு பாய்ந்து வந்ததே...
அதை மின்னல் என்பதா? சுடும் தணல் என்பதா?

உடல் ஊடுருவி உள்ளே சென்று உரைந்ததுவே...
அதை நெருப்பென்பதா? மார்கழி குளிர் என்பதா?

பூமி மகள் கூட நாணம் கொள்ளும் உன் நடையை....
நான் இசை என்பதா? நாட்டிய கலை என்பதா?

கண்டு துளையிட்டு காயம் பட்ட என் மனதில்...
ஒரு தாளம் வந்ததா? பெரும் தாகம் வந்ததா?

உன் காதுகளில் வளையங்கள் கதை சொல்லுதே...
அதை ஊஞ்சல் என்பதா? இல்லை விலங்கு என்பதா?

அதில் உட்கார்ந்து நானும் அங்கே பேசுவதும்...
உனக்கு கேட்க வில்லையா? காற்றும் சேர்க்க வில்லையா?

உன் இதழ்களும் அசைந்ததும் இசை வந்ததே...
அதை வார்த்தை என்பதா? சுக வதை என்பதா?

உன் புருவத்தின் அசைவினில் விடு பட்டதே?
அதை அன்பு என்பதா? காதல் அம்பு என்பதா?

எழுதியவர் : யாசுதாசன் (14-May-11, 10:26 am)
சேர்த்தது : pOp SamEeR
பார்வை : 322

மேலே