கஜல்

என் பேனா மை உருஞ்சும் பெருந்தாகம் உனது.....
*************
என் கண்களால் உண்ணப்படும்..
தனி ஒரு..
கனி, நீ..!
*************
உன்னை மீண்டும் மீண்டும்
நெய்து,
நான் கிழிந்து போனேன்...!
*************
சோ(சே)லைக்குள் இருக்கும் மலர் நீ
*************
உன் ஆடைப்பூக்களுக்கு,
எங்கிருந்துதான் கிடைக்கிறதோ தேன்..?
***************
நீ என்னை திரும்பிபார்க்காத ஒரு பயணத்தில்தான்..
நான் ஒரு புள்ளியாய் கரைந்து காணாமல் போகிறேன்..!
***************
என் கண்ணீர் பூக்களை ...
உன் தடாகம் எங்கும் விதைத்திருக்கிறேன்.!
***************
ஓராயிரம் நினைவுகள் சேர்ந்து..
உன்னை சுமந்து வரும் ..
என் கண்களுக்குள் கனவாக.!
***************
உன் தொடுகைக்காக. .
உடல் ஏந்துவதே..என் காதல் வாழ்வாகிப்போனது..!
****************
உன் கையில் களிமண்ணாய்..
நானிருந்தபோது.. என் வடிவங்களை நீயே தீர்மானித்தாய்..!

எழுதியவர் : நிலாகண்ணன் (29-Jun-15, 1:02 pm)
Tanglish : kajal
பார்வை : 111

மேலே