உனக்காக நான் கிறுக்கிய கிறுக்கல்கள் 555

என்னவளே...

நீ சொன்னாயடி
என்னிடம்...

கவிதைக்காக பலமுறை
பிறக்க வேண்டும்...

காதலுக்காக ஒருமுறையாவது
பிறக்க வேண்டும் என்று...

வசபட்டதடி காதலும்
கவிதையும்...

நான் எழுதிய மற்ற கவிதைகளோடு
ஒப்பிடும் போது...

நான் உனக்காக எழுதிய
கவிதைகளே...

விலைமதிக்க முடியாதவை
தாண்டி...

என் காதலை போல
என் கவிதைகளும் உனக்காக.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (29-Jun-15, 1:20 pm)
பார்வை : 368

மேலே