ஒவ்வொரு நாளும்

என் பொழுதுகள்
விடிகின்றன
ஒவ்வொன்றும் புதிதாய்..
நான் வரவேற்க அவை
காத்திருப்பதில்லை ..

கரிசனத்துடன்
என்னைக் காண வந்து
அனுபவங்கள் பல தந்து..
அன்போடு உச்சி முகர்ந்து
என்னைத் தாலாட்டி உறங்க வைத்து
அமைதியாக விடை பெற்று
இரவு முடிகையில்
ஓசையின்றி வெளியேறும்
ஒவ்வொரு நாளும்
எனக்கு இனிமை சேர்க்கும்
என்பதால்..

நடந்தவை,
நடப்பவை ..
எல்லாமே ..
எனக்கு பிடித்தாலும் ..
பிடிக்காவிட்டாலும் ...
என் எல்லா நாட்களையும்
பொழுதுகளையும்
எனக்கு
எப்போதும் பிடிக்கிறது!..

எழுதியவர் : கருணா (29-Jun-15, 3:14 pm)
Tanglish : ovvoru naalum
பார்வை : 134

மேலே