என்னுள் நீ இருப்பதால்

மலரை நேசிக்கிறேன்
உன் கூந்தலில் குடிகொண்டிருப்பதால் !
இசையை நேசிக்கிறேன்
கொலுசுகள் உன் பாதங்களில் தவழ்வதால் !
வெட்கத்தை நேசிக்கிறேன்
உன் முகத்தில் பவனி வருவதால்!
கவிதையை நேசிக்கிறேன்
உன்னால் நான் கவிஞன் ஆனதால் !
என்னையே நேசிக்கிறேன்
என்னுள் "நீ" இருப்பதால் ...!

எழுதியவர் : உடுமலை சே.ரா .முஹமது (30-Jun-15, 11:41 am)
பார்வை : 262

மேலே