மெழுகு வர்த்திகள்

வேலையின்றி அலைவோர் பலர்..
வேண்டுமென்றே திரிவோர் சிலர்...
வேலை தேடுபவர் பாவமென்று
வேலைக்குச் சேர்த்துவிட்டால்..

இதுவும் ஒரு வேலையா...
இது என் தகுதிக்கு பொருந்துமா
இந்த வேலை தேவை இல்லை
இப்படியே நான் இருந்திடுவேன் ...என

சுற்றித்திரியும் சமூகத்தில் ..
சுடர் விளக்குகள் சிலவே..
மெல்லென உருகுகின்றதே...
மெழுகு வர்த்திகளாக...

பாவம் அவை ..நிறையவே ..
பாவம் செய்தவையோ...
கோலம் குலைந்து..
குற்றுயிராய் வாழ்கின்றதே..

பலவர்ண நிறம் ..
பார்ப்போருக்கு பகட்டு..
அதற்கு மட்டுமே..புரியும்
அது படும் வேதனை..

மெழுகு வர்த்திகள் பல..
மெச்சப் படுபவை சில..இதை
புரிந்துகொள்பவர்கள் சிலர்
புரியாதவர்களே பலர்..


பிரியமான பிரியா

எழுதியவர் : திருமதி. பிரியா. கருணாகரன் (30-Jun-15, 7:34 pm)
Tanglish : melugu varthikal
பார்வை : 209

மேலே