வேறுபடும் உண்மைகள்
2011 ல் புதுக்கவிதை
கொத்து விளக்கு போன்றது
உண்மை; அரங்கத்திலுள்ள
அனைவரும் காணலாம்;
விளக்கைக் காணும் கோணம்
தான் வேறு வேறு.
உண்மையும் அவ்வாறே;
அவரவர் கண்ணோட்டத்திற்கு
ஏற்றபடி வேறுபடும் உண்மைகள்;
தீர விசாரித்து அறிவதே
தெளிவு.
2015 ல் மரபுக் கவிதைகள்
வேறுபடும் உண்மைகள் – இருவிகற்ப நேரிசை வெண்பாக்கள்
கொத்து விளக்கினைப் போன்றதுதான் உண்மையாம்;
எத்தனையோ பேர்கள் அரங்கத்தில் – கொத்து
விளக்குகளைக் கண்டாலும் வெவ்வேறு கோணம்;
விளக்கின் அமைப்புவேறு தான்! 1
அவ்வாறே உண்மையும் ஒவ்வொருவர் கண்ணோட்டம்
எவ்வளவோ ஏற்றபடி வேறுபடும் - அவ்வளவும்
உண்மைகள்; தீர விசாரித்(து) அறிவதே
உண்மைதனைக் காண்போர் தெளிவு. 2