வாலிபம்
அது வாழ்கைப் புத்தகத்தின்
ஆரம்ப பக்கங்களும்
அறிமுக பாடமும்தான் !
இன்னும் படிக்க சுவாரஸ்யமான
பக்கங்களும் பாடங்களும்
ஏராளம் ஏராளம் !
மூடிவிட முயற்ச்சிக்காமல்
புரட்டு அடுத்த பக்கத்தை !
முழுவதும் படித்து சுவைத்துப்பார்
முதுமைப் பாடத்தையும் சேர்த்து !
மூடிவிடுவான் புத்தகத்தை எழுதியவனே !