முதுமை

அனுபவத்தின் அகராதி
அறுபது வயது குழந்தை
பல் வளர்ந்து உதிர்ந்த
முதிர்ந்த குழந்தை!
சொல் பிறழ்ந்து பேசும்
பொக்கைவாய் குழந்தை!

தேசத்துக்கு மூத்த குடிமகன்
பாசத்தில் முதிர்ந்த குடிமகன் !
பேரன் அழைக்கிறான் தாத்தா
மகன் சொல்வதோ டாடா!

கரணம் இந்த குழந்தைக்கு
முதியோர் இல்லத்திலே அட்மிஷன் !
தூக்கி வளர்த்த மகனே தகப்பனை
தூக்காமல் சுமக்க மறுக்கிறான் !

அப்பா மகனே! தாத்தா போகும்
மடம் உன் மகனுக்கும் தெரியும் என்பதை
மறந்துவிடாதே!

பெற்றோரை மற்றோர் ஆக்கும்
கனவான்களே நீங்களும் நாளைய
தாத்தா பாட்டிதான் ! அரசன் அன்றே!
தெய்வம் நின்றும்! பிள்ளைகள் வளர்ந்தும் .......

எழுதியவர் : கவிஞர் சமூக ஆர்வலர் அலெக் (30-Jun-15, 9:06 pm)
Tanglish : muthumai
பார்வை : 191

மேலே