ரோஜாக்கள் போதவில்லை
ரோஜாக்கள் போதவில்லை
=======================================ருத்ரா
பொன்பூக்கள் ஜரிகைஇட்ட
பச்சைக்குடை நிழல் விரித்த
அந்த "கொன்றை" மரத்தடியில்.......
ஒரு சல்வார் கம்மீஸ் கன்னி
சற்று அந்த
குத்துக்கல்லில் சாய்ந்து
காற்று வாங்கி
வேர்வையை வழிந்தெறிந்து விட்டு
அங்கு நின்றாள்.
அந்த கல்லும் கூட வாசனைபிடித்து
அந்த வியர்வைத்துளியில்
விதையாகி செடியாகி
அவளிடமே
ஒரு ரோஜாவை நீட்டுகிறது
"ஐ லவ் யூ" என்று.
அஞ்சு பில்லியன் ஆண்டுகளுக்கு
முன்னமேயே
இந்த உலகம் உருண்டு திரண்டதாமே!
நெருப்பில்
உயிரை தயிர் கடையும் முன்பே
அரும்பியது தான் இது.
இந்த சொல் இன்னும் இன்னும்
நிரம்பி
வழிந்து கொண்டே தான் இருக்கிறது.
ரோஜாக்கள் போதவில்லை!
____________________________________________________