வலி

விழி செய்த வித்தையால் வழி மாறி போனாளோ............
பழி சொல்லும் ஊரிடம் மொழியின்றி நின்றாளோ..........
ஒரு வார்த்தை மயக்கத்தால் மதியற்றவள் ஆனாளோ.......
தெருவோரம் அழுதிடும் சிறு பிள்ளை தான் இவளோ...
வாரி வாரி இறைத்தாலும் வற்றாது இவள் கண்ணீர் .......
ஓடி ஓடி கலைத்தாலும் கிடைக்காது இவள் கானல் நீர்......
அன்று கருவுற்ற சேதி கேட்டு கற்சிலையாய் ஆனாளோ .....
இன்று .....இவளே......இவளை......உளி கொண்டு செதுக்கிட ...
வலி கொண்டு வந்தாளோ.........

எழுதியவர் : Anjali (1-Jul-15, 2:02 pm)
Tanglish : vali
பார்வை : 96

மேலே