FIR First Information Report

எதையும் மறைத்ததில்லை உன்னிடம்
சரியோ! தவறோ!
முதலில் கூறிடுவேன் உன்னிடம்
மட்டுமே!
சரியான ஒன்றை
செய்து விட்டால்
என் உச்சி முகர்வாய்!
தவறை பயந்து
பயந்து நான்
சொல்ல
தைரியமாக சொல்
என்று தெம்பை தருவாய்...
சொல்லி முடித்த
அடுத்த நொடி
இனிமேல் இப்படி செய்யாதே!
என்று மௌன மொழி பேசுவாய்...
வெற்றியின் தருணம்
ஆரத்தழுவி
தட்டிக்கொடுத்து
பாராட்டுவாய்...
உன்னில் இருந்தே
பாராட்டுகள்
தொடங்கின எப்பொழுதும்....
தோல்வியின் தருணம்
உன் தோளும் மடியும்
எனை சரியாமல்
தாங்கிபிடித்துக்கொண்டே
இருந்திருக்கிறது...
நீயும் என் அருகில்
அமர்ந்து ஆறுதல்
மொழி பேசுவாய்...
உன்னோடு மட்டும்
என் வருத்தங்கள்
கரைந்தன எப்பொழுதும்...
நான் கூறும்
முன்னே!
என் தழுவலே...
FIR செய்துவிடும்
உனக்கு...
என் நிலை எப்படி
இருக்கிறது என்று...