ஹைக்கூ சென்றியு துளிப்பா கவிஞர் இரா இரவி

ஹைக்கூ ( சென்றியு ) துளிப்பா ! கவிஞர் இரா .இரவி !

கற்பிக்கின்றன
மலர்ச்சியை
மலர்கள் !

மலர்களென
மலர்ந்தே இருக்கட்டும்
மனித முககங்கள் !

முடியும் என்ற முயற்சியே
தொடக்கமாகும்
வெற்றிக்கு !

முடியாது என்ற எண்ணமே
தொடக்கமாகும்
தோல்விக்கு !

விரையமல்ல
விவேகம்
வாசிப்பு நேரம் !

சுற்றுச்சுழல் கேடு
கந்தக பூக்கள்
மத்தாப்பூ !

புகை மாசு
சிந்தனை மாசு
இரண்டும் கேடு !

பலருக்கு
பணம் தருகின்றன
இல்லாத பேய்கள் !

தூர விலக்கும்
துக்கத்தை
துணிவு !

உணவு கிடைத்ததும்
உண்பதில்லை
எறும்பு !

விரைவானது
விமானத்தை விட
மனசு !

வேண்டாம் வேண்டா வெறுப்பு
வேண்டும் விருப்பு
பணியில் !

பணத்தால் முடியாதது
முடியும்
பண்பால் !

செலவிடுங்கள்
சில நிமிடங்கள் தினமும்
இயற்கை ரசிக்க !

எனக்கு நேரமே இல்லை
என்பது
பெரிய பொய் !

தேட வேண்டாம் வெளியே
உள்ளது உங்களிடமே
மகிழ்ச்சி !

பலசாலியாக்கும்
பலவீனனையும்
தன்னம்பிக்கை !

உதவிடும்
சோகம் மறக்க
சுறுசுறுப்பு !

கவனக் குறைவின்
தண்டனையை
விதி என்பர் !

எழுதியவர் : கவிஞர் இரா .இரவி (1-Jul-15, 10:43 pm)
சேர்த்தது : கவிஞர் இரா இரவி
பார்வை : 134

மேலே