காதலித்த கணங்களில்
காதலித்த கணங்களில்
என் உயிர் உருகுவதை உணர்ந்திருக்கிறேன்
தேகமெங்கும் உணர்வுகள் தேங்கி நிற்பதை தெரிந்திருக்கிறேன்
நினைவுகளுக்கும் நிறங்கள் இருப்பதை நின்று கவனித்திருக்கிறேன்
படைப்பின் மகத்துவத்தை முகர்ந்திருக்கிறேன்
இடையுறாது மகிழ்ச்சியில் திளைத்திருக்கிறேன்
அருகாமை சுகத்தை அனுபவித்திருக்கிறேன்
உடலில்லா இன்பம் ஒன்றை துய்த்திருக்கிறேன்
பகலிரவு பாராமல் மனம் பாட்டிசைப்பதை கேட்டிருக்கிறேன்
கடவுளுக்கு அருகில் இருக்கும் ஆனந்தத்தை அனுபவித்திருக்கிறேன்
தனித்து தன்னிலை மறந்து
இறந்த நிலை எய்தியிருக்கிறேன்
பறக்கும் பரவசநிலையை அடைந்திருக்கிறேன்
இயற்கையின் உன்னத்தில் கலந்திருக்கிறேன்
காலப்பகுதியில் பெருவெளியில் கரைந்துப் போயிருக்கிறேன்
பூக்களின் மென்மையை உடலில் போர்த்தியிருக்கிறேன்
புலனில்லா பேரின்பம் பெற்றிருக்கிறேன்
நினைவில் நீந்தி மயங்கி கிடந்திருக்கின்றேன்
பார்வைகள் பேசுவதை பார்த்திருக்கிறேன்
ஒரு புன்னகை அருவியை உருவாக்குவதை பார்த்திருக்கிறேன்
காற்றில் கலந்த அவள் நினைவுகளில் நீராடியிருக்கிறேன்
எத்தனை முறை பார்த்தாலும்
சொல்வதற்கு ஏதாவது ஒன்று இருந்துக் கொண்டே இருக்கும்
எல்லையில்லா பயணத்தில் இருந்த ஞாபகம் ...