கண்ணாடி முகங்கள்
கண்ணாடி முகங்கள்
முன்னாடிஇருந்து
சாதகம் செய்கிறார்கள்
கண்ணாடி அரங்குகளில்
இசையரசர்கள்
ரசனையோடு
கண்ணாடிமுன்நின்று
பாவனைகள் வளர்த்தனர்
நாடக நடிகர்கள்
ரசனையோடு
கண்ணாடிமுன்
பார்த்து பார்த்து அபிநயித்தனர்
நடிகையர் திலகங்கள்
பளபளக்கும்
வண்ணக் கண்ணாடியில்
பதிக்கப்பட்ட
கண்ணைக் கவரும்
அழகு குளியலறை கட்டினார்கள்
அழகு ராசாக்கள்
ரசனையோடு
முகக் கண்ணாடியில்
பார்த்து பார்த்து
அலங்கரித்துக் கொள்கிறார்கள்
காதல் கலைஞர்கள்
ரசனையோடு
ஒரே முகக் கண்ணாடி கலங்கவில்லை எதற்கும்
காலங்காலமாக
நிச பிம்பங்களாகவே....