ஆணியடிக்கப்பட்ட இதயம்

ஆணியடிக்கப்பட்ட இதயம்!

எனக்குத் தெரியும்
அவளால் எனக்காகவே
உருவாக்கப்பட்ட
வாழ்வின் அடையாளங்கள்

உயிரை ஊடுருவும் ஒரு பார்வை
அன்பு தெரிக்கும் புன்னகை
உணர்வை சிதறடிக்கும் ஒரு முகபாவம்
ஆசைக்கு அணை போடும் சில அசைவுகள்
இதயம் நிரப்பும் இரண்டொரு வார்த்தைகள்
தொட்டுவிடத் தயங்கிய நடுங்கிய கைவிரல்கள்
தொடர்பு கொள்ள சொல்லிக் கொடுத்த உத்திகள்
எனக்கு மட்டுமே புரியும் அந்த உடல்மொழிகள்

அனைத்தும் இதயத்தில் நிரந்தரமாய்
நிறைந்து நிற்க
ஆணியடித்து மாட்டிவிட்டேன்

ஆனால் இன்று என்னை நீங்கி
நீ நெடுத்தொலைவுச் சென்றுவிட்டாய்
நிரந்தரமாய்

ஒவ்வொரு அடையாளமாக
இதயத்திலிருந்து
ஆணியுடன் பிய்த்தெரிய முயல்கிறேன்

ஒவ்வொரு அடையாளமும்
வெளிவர மறுத்து
உயிர் போகும் வலியை தருகிறது
இரத்தம் வழிந்து சதையும் சேர்ந்தே வருகிறது
விளக்க முடியாத வேதனை..
அடையாளங்கள் மட்டும் அழிய மறுக்கின்றன

அடிக்கப்பட்ட ஆணிகள்
அப்படியே இருக்கட்டும்
என்று விட்டுவிட்டேன்

எழுதியவர் : இ ஆ சதீஸ்குமார் (3-Jul-15, 12:18 am)
பார்வை : 272

மேலே