வெள்ளை நிலவே

வெள்ளை நிலவே... மனதை அள்ளும் கொள்ளை நிலவே!!

மொட்டை மாடியிலிருந்து நீ கைகெட்டும் தூரம்
ஓடும் வண்டியிலிருந்து நீ காலை துரத்தும் நாய் குட்டி!

காதல் பயணம் போகும் காதலர்களுக்கோ பாதுகாப்பான தோழன்,...
தலைவி நினைவிலிருக்கும் தலைவனுக்கோ அவள் முகங்காட்டும் திரை...

சோறூட்டும் அன்னைக்கு நீயோ அழுகையாற்றும் பொம்மை..
கற்றுணர்ந்த விஞ்ஞானிக்கு நீயோ அவன் வாழ ஏங்கும் பூமி...

தென்னையொலையினூடே நீ எட்டி பார்க்க.. தமிழ்ப் பெண்களின் சாயல்!
மேகந்தாண்டி நீ நீந்தி போக.. பறவைககூட்டத்தின் சாயல்...

வெள்ளை நிலவே...என் மனதை அள்ளும் கொள்ளை நிலவே!!

எழுதியவர் : கிருஷ்ணா (3-Jul-15, 1:29 am)
Tanglish : vellai nilave
பார்வை : 985

மேலே