என்றும் மன நிறைவே
இரண்டுபேர் சேர்ந்து என்னைய
உருவாக்கி னாங்க,
அப்பா, அம்மா சேர்ந்தென்னை
உருவாக்கி னாங்க;
இரண்டுபேர் சேர்ந்தென் உடல்நலத்தை
கவனிச்சி கிட்டாங்க,
குழந்தைகள் டாக்டரும் என்நலத்தை
கவனிச்சி கிட்டாங்களே!
இரண்டுபேர் சேர்ந்தென்னை செவ்வையாகப்
பார்த்துக் கிட்டாங்க,
செல்லமா தாத்தாவும், பாட்டியும்
பார்த்துக் கிட்டாங்க.
இரண்டுபேர் சேர்ந்து நல்லதெல்லாம்
கத்துக் கொடுத்தாங்க,
ஆரம்பநிலை, உயர்நிலை ஆசிரியர்
கத்துக் கொடுத்தாங்களே!
இரண்டுபேர் சேர்ந்து இலகுவாய்
எனக்குதோள் கொடுத்தாங்க
நண்பர்கள் துணையாய் நட்புக்குத்
இருதோள் கொடுத்தாங்க;.
வேலைவந்து, நல்லவேளை வந்தது;
பருவம் வந்தது,
திருமண வயதும் வந்தது;
மனையாள் வந்தாளே!
மனையாள் வந்தாள்; இனிய
துணையாள் வந்தாள்;
என்றும் துணையாய் வந்தாள்.
பிள்ளைகள் பிறந்தனர்,
ஆண்ஒன்று, பெண்ஒன்று, இரண்டு
பிள்ளைகள் பிறந்தனர்;
ஆசைக்(கு)ஒன்று ஆஸ்திக்கு ஒன்றெனக்கு
என்றும்மன நிறைவே!