காத்திருக்கிறேன்

அன்றே கூறியிருக்கலாம்...
நீயும் நானும்
விளையாடிய கண்ணாமூச்சி
ஆட்டத்தில் மாட்டிகொண்டு
தவிப்பது என் இதயம்தான்...
உன் காதலை
நீ மட்டும் அன்றே
கூறியிருந்தால் ...
இன்று உன் நினைவாக உன்
காதலையாவது என்னோடு
வாழ வைத்திருப்பேன்...
நீயோ சொல்லாமலே
சென்றுவிட்டதால் காத்திருக்கிறேன்
உன் ஒற்றை பதிலை கேட்க
நம் அடுத்த ஜென்மத்திற்காக...

எழுதியவர் : இந்திராணி (3-Jul-15, 3:41 pm)
Tanglish : kaathirukiren
பார்வை : 93

மேலே