காதல் கர்ணன்

பெண்ணே.!

கவசக்குண்டலத்தோடு
பிறந்த கர்ணனோ நீ.!!

என் காதல் அம்புகள் உன்
மனதை துளைக்கமுடியாமல்
தோற்றுப்போகின்றனவே.!

கர்ணனை போல்
நீயும் வள்ளலானால்.!
உன் மனதை எனக்கு தந்துவிடு..

காதல் காவியங்கள்
உன்னை போற்றட்டும்.!!

எழுதியவர் : பார்த்திப மணி (3-Jul-15, 4:49 pm)
Tanglish : kaadhal karnan
பார்வை : 121

மேலே