காசு காசு

காசு செலவு பண்ண பண்ண
அது பையில் முடியும் வரை
கொடுத்துக் கொண்டே இருக்கணும்
தேவைகள் வந்து நிரம்பிக் கொண்டே இருக்கும்
தேவைக்கு அளவே இல்லை
கட்டுப் படுத்த நாம் நினைத்தாலும்
கட்டுக்குள் அடங்காது தேவைகள்
காசு முடிந்து வீட்டுக்கு சென்று
வரவும் செலவும் கணக்கு பார்த்தால்
மீதி இன்னும் தேவைகள் தான் மிச்சம்
நடுத்தர மக்களின் வாழ்க்கை
என்றும் ஏக்கமும் தேக்கமும் தான்
ஆயிரம் ஆயிரம் ரூபா நோட்டுக்கள் தான்
பறக்குது பறக்குது அவசரமாய்
காலம் பூரா உழைத்தாலும் சேர்த்து வைக்க
முடியவில்லை ,இது நடுத்தர மக்களின் ஆதங்கம்
சேர்த்து சேர்த்து கோடீஸ்வரன் ஆனாலும்
கொள்ளை போனது அவன் நிம்மதிதான்
உலகம் மெச்ச வாழ்ந்தாலும்
உள்ளத்திலே அவன் ஒரு ஏழைதான்
அடிமட்டத்தில் இருந்து
ஓடாய் உழைத்து இளைத்து உயர்ந்த நிலை
அவனுக்குள் ஓடிக்கோண்டே இருக்கும்
பஞ்சம் போய் விடும்
பஞ்சத்தில் பட்ட வடு மறையாது
அது வறுமை கொடுத்த வடு ,
காசு அவன் வலிமையும் உழைப்பும்
கொடுத்திட்ட வலிகள் நிறைந்த வடு ,
மொத்தத்தில் காசு மனிதனை பாடாய் படுத்துகிறது
ஆலாய் பறக்கிறான் மனிதன்
அவனை ஆட்டி வைக்கிறது காசு

எழுதியவர் : பாத்திமா மலர் (3-Jul-15, 9:59 pm)
Tanglish : kaasu kaasu
பார்வை : 240

மேலே